×

இலவச வீடியோ கிராபி பயிற்சி

திருப்பூர், ஜூன் 21: அனுப்பர்பாளையம் கனரா வங்கி கிளையில் செயல்படும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இலவச  போட்டோ மற்றும் வீடியோ கிராபி பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி 30 நாட்கள் முழு நேர வகுப்பாக நடைபெறும். இதில், 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட எழுத, படிக்க தெரிந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்கு பின், சான்றிதழ் வழங்கப்படும். சேர விரும்புவோர், ‘கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், கோவை டிபார்ட்மென்ட் ஸ்டோர் வளாகம், அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம், திருப்பூர்-641 652’ என்ற முகவரிக்கு நேரில் வரவும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0421-2256 626 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பயிற்சி நிலைய இயக்குனர் தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மணல் லாரிகள் சிறைபிடிப்பு